பொங்கல் தினத்தில் விஜய், சிம்பு மோதுவது உறுதியா? 

 

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் தமிழகம் முழுவதும் உலகம் முழுவதும் வெளியாகும் என்று ஏற்கனவே செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

ஆனால் அதே நேரத்தில் ஜனவரி 13-ஆம் தேதி இந்த படத்தை வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி வருவதாகவும் ஜனவரி 1ஆம் தேதி வெளியாகும் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் டிரைலரில் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது 

master easwaran

இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தின் சென்சாரிலும் இன்னும் ஒரு சில பிரச்சினைகள் இருப்பதாகவும் அதை தீர்க்கும் பணிகளும் படக்குழுவினர் இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் ஒட்டுமொத்த தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ’மாஸ்டர்’ திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்த நிலையில் திடீரென பொங்கல் ரேஸில் சிம்புவின் ’ஈஸ்வரன்’ குதித்துள்ளது

ஜனவரி 14ஆம் தேதி சிம்புவின் ’ஈஸ்வரன்’ படத்தை திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி பொங்கல் தினத்தில் விஜய்யின் ’மாஸ்டர்’ மற்றும் சிம்புவின் ’ஈஸ்வரன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் மோதுவது உறுதியாகி உள்ளது. மேலும் இரண்டு படங்களின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது 

ஏற்கனவே விஜய் மற்றும் சிம்பு படங்கள் நான்கு முறை ஒரே நாளில் வெளியாகியுள்ள நிலையில் தற்போது மீண்டும் இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web