பத்தாயிரம் ரூபாய் கொடுத்து ஆரியை வெளியேற்றுகிறார்களா? ரம்யா கூறிய அதிரடி காரணம்!

 

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் அனிதா தான் வெளியே வருவார் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா இந்த வாரம் ஆரிதான் வெளியேறுவார் என்று கூறியுள்ளார் 

நேற்றைய நிகழ்ச்சியின்போது ஜெயச்சந்திரன் வழங்கிய ரூபாய் பத்தாயிரம் ஆரிக்கு கொடுக்கப்பட்டது. ஆரி அடுத்த வார கேப்டனாக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு இந்த தொகை கொடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது 

ramya

இதுகுறித்து அனிதாவிடம் நள்ளிரவில் பேசிக்கொண்டிருந்த ரம்யா, இதற்கு முன்னர் ரேகா வெளியேறும் போது அவருக்கு மீன் கொடுத்து வெளியேற்றினார்கள் என்றும், அதேபோல ரூபாய் பத்தாயிரம் கொடுத்து ஆரியை வெளியேற்றுகிறார்கள் என்று தனது கணிப்பை கூறினார்

ஆனால் அனிதா அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரம்யாவுக்கு கடுமையான போட்டியாளராக இருக்கும் ஆரி வெளியேற வேண்டும் என்று ரம்யா தனது மனதில் எண்ணம் இருந்தாலும் ஆரி வெளியேற வேண்டுமா? இல்லையா? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்பதை மறந்து விட்டதாகவே பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

From around the web