தமிழகத்தில் திறக்கப்படுகிறதா திரையரங்குகள்? அமைச்சரின் முக்கிய தகவல்

தமிழகத்தில் திரையரங்கு குறிப்பு திறப்பது குறித்து நாளை மறுநாள் திரைத்துறையினர்களை முதல்வர் சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளார் என அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. இந்த ஐந்து மாதங்களும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் திரையரங்க உரிமையாளர்கள் மட்டுமின்றி திரையரங்கில் வேலை செய்யும் ஊழியர்களும் பெரும் சிக்கலில் உள்ளனர் 

இந்த நிலையில் அரசு தரும் நிபந்தனைகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் அவ்வப்போது கோரிக்கை விடுத்து வருகின்றனர்

மேலும் நாடு முழுவதும் திரையரங்குகள் திறப்பது குறித்து வரும் எட்டாம் தேதி மத்திய அரசு திரையரங்க உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது 

இந்த நிலையில் திரையரங்குகள் திறப்பது குறித்து நாளை மறுநாள் திரைத்துறையினர் முதல்வரை சந்திக்கும் போது முடிவு செய்யப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் தெரிவித்துள்ளார். இதை அடுத்து தமிழகத்தில் விரைவில் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது 

From around the web