அர்ச்சனாவின் முதல் பேட்டி: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட அர்ச்சனா தனது சமூக வலைத்தளத்தில் தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு பதில் அளித்து வருகிறார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னர் முதன்முதலாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இந்த பேட்டி யூ டியூபில் வைரல் ஆகி வருகிறது 

archana

இந்த பேட்டியில் குரூப்பிஸம்,  அன்பு குறித்ஹு அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் அன்பு என்பதை அவர் ஒரு ஸ்டாட்டர்ஜிக்காக பயன்படுத்தியதை அந்த பேட்டியில் ஒப்புக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

தான் அன்பை அனைவருக்கும் சமமாகத்தான் காட்டியதாகவும் அவர் மீண்டும் மீண்டும் கூறிவருகிறார் அதேபோல் பிக்பாஸ் வீட்டில் எந்த குரூப்பும் இல்லை என்றும் அவர் சாதித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் குரூப்பிஸம் இருப்பது தெரியவரும் நிலையில் அர்ச்சனா வெளியே வந்த பின்னர் அனைத்து எபிசோட்களை பார்த்த பின்னரும் அதை ஒப்புக் கொள்ளாமல் இருப்பதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து நெட்டிசன்கள் இந்த வீடியோவுக்கு வறுத்தெடுக்கும் வகையில் கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.

From around the web