அர்ச்சனா ஏன் வெளியே போறாங்க: சரியான பாயிண்டை சொன்ன அனிதா!

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று அர்ச்சனா ஒருவழியாக வெளியேற்றப்பட்டார். கடைசியாக அஜித் மற்றும் அர்ச்சனா ஆகிய இருவர் மட்டுமே டேஞ்சர் ஜோனில் இருந்த நிலையில் அர்ச்சனா வெளியேற்றப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்தார். அர்ச்சனாவுக்கு இந்த அறிவிப்பு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் துளி கூட அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் முடிந்தவரை சமாளித்து சிரித்த முகத்துடன் அனைவரிடமும் விடை பெற்றார் 

அர்ச்சனா ஒரு சவாலான போட்டியாளராக தான் அனைத்து போட்டியாளர்கக்குளும் இருந்தார். ஆனால் அவர் அன்பு என்ற தந்திரத்தை பயன்படுத்தியது தான் அவர் செய்த ஒரே தவறு. இதன் காரணமாகத்தான் அவர் வெளியேறுகிறார் என்று பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 

group

அர்ச்சனா வெளியேற்றம் குறித்து அனைத்து ஆரி, அனிதா, பாலாஜி ஆகியோரும் டிஸ்கஸ் செய்தபோது அர்ச்சனா மிகவும் ஒரு போல்டான லேடி என்றும், இந்த அளவுக்கு ஒரு தைரியமான பெண்ணை நான் பார்த்ததே இல்லை என்றும், அவர் தனக்காக விளையாடியிருந்தால் கண்டிப்பாக பைனல் வரை சென்று இருப்பார் என்றும், ஆனால் அவர் ஒரு சிலரை முன்னிலைப்படுத்துவதற்காக அன்பு என்ற தந்திரத்தை கடைபிடித்ததால் தான் அவர் இன்று வெளியேறுகிறார் என்றும் அனிதா சரியான ஒரு பாயிண்டை கூறினார் 

ஆரி மற்றும் பாலாஜி ஆகியோர் அர்ச்சனாவின் வெளியேற்றத்தை நம்ப முடியாமல் இருந்தனர்.  அர்ச்சனா வெளியேறுவார் என்று நான் நினைக்கவே இல்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். பாலாஜி காமெடியாக இனி சோத்துக்கு என்ன செய்வது என்று குறிப்பிட்டதும் சுவராசியமாக இருந்தது. அர்ச்சனாவின் வெளியேற்றம் ரியோ, சோம் மற்றும் கேபி ஆகிய மூவருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது என்பதும் அவர்கள் நேற்றைய நிகழ்ச்சி முடியும்வரை சோகமாகவே இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web