வெளியேறும்போதும் ரியல் வின்னரை அறிவித்துவிட்டு சென்ற அர்ச்சனா!

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஒருவர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று யாரும் எதிர்பாராத வகையில் அர்ச்சனா வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் மிக்சர் சாப்பிடுபவர்கள் எல்லாம் இன்னும் இருக்கும் நிலையில் அதகளமாக விளையாடிக் கொண்டிருந்த அர்ச்சனா வெளியேறுவது சற்று அதிர்ச்சியாக இருந்தாலும் அவர் விளையாட்டிற்கு கடைபிடித்த வழிமுறைகள் பார்வையாளர்கள் யாருக்குமே திருப்தி தரவில்லை என்பதுதான் அவரது வெளியேற்றத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது 

இந்த நிலையில் அர்ச்சனா வெளியேறும் போது கூட தனது அன்பு குரூப்பை சிறப்பு வாழ்த்து தெரிவித்துவிட்டு தான் சென்றார். குறிப்பாக ரியோ தான் ரியல் வின்னர் என்றும் அவர் கூறியதும்,, அவர்தான் டைட்டில் வின்னர் என்று அவர் மறைமுகமாக கூறியது போல் இருந்தது 

arcahna rio winner

மேலும் கேபியை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று சக போட்டியாளர்கள் இடம் வேண்டுகோள் விடுத்ததும், அவர் தன்னிடம் உள்ள காயின்கள் அனைத்தையுமே கேபிக்கு கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் சோம்சேகருக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்பாக விளையாட வேண்டும் என்று அறிவுரை கூறினார். மற்றவர்களிடமும் அவர் விடைபெறும்போது அறிவுரை கூறினாலும் இவர்கள் மூவருக்கும் கூறிய அறிவுரைகள், அன்பு, கொஞ்சம் அதிகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது

பிக்பாஸ் நிகழ்ச்சி பொருத்தவரை தனக்காக விளையாடாமல் தன்னை சேர்ந்தவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று விளையாடியது ஒன்று மட்டுமே அர்ச்சனா செய்த தவறு என்றும் ஆனால் அதே நேரத்தில் இதற்கு மேலும் அவர் இருந்தால் அவருடைய இமேஜ் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் என்றும் அவர் வெளியேறியது ஒருவேளை ஒரு வகையில் அவருக்கு நன்மை தான் என்றும் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

From around the web