வந்த மறுநாளே வேலையை ஆரம்பித்த அர்ச்சனா: வைரலாகும் வீடியோ 

 

பிக் பாஸ் வீட்டில் வைல்ட்கார்டு எண்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா வந்தவுடன் அனைவருக்கும் பட்டப்பெயர்களை வழங்கி போட்டியாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். குறிப்பாக ஒரு சில போட்டியாளர்களுக்கு அவர் அளித்த பட்டம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரிந்ததே 

இந்த நிலையில் அர்ச்சனா தான் வீட்டில் நுழைந்தவுடன் தன்னை பாலாஜி சரியாக வரவேற்கவில்லை என்றும் தன்னை ஒரு தலைவலியாக பாலாஜி கருதுவதாகவும் கூறியது தனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்தது என்றும் ஆனால் போகப் போக சரியாகி விடும் என்று நினைக்கிறேன் என்று கூறிய காட்சிகளின் அன்சீன் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரமோவில் கமலஹாசன் தோன்றி சுரேஷ் குறித்து பெருமையாக சில வார்த்தைகளை தெரிவித்திருந்தார். வில்லனின் அடியாட்கள் போலிருந்த இவருடைய கேரக்டர் எப்படி இருக்குமோ என நாமும் நாம் நினைத்தோம். ஆனால் அவர் தான் இன்று ஹீரோவாகி விட்டார் என்று கூறினார். ஆனால் அதே நேரத்தில் நாம் நல்லவர்கள் என்று நினைத்து கொண்டு இருந்தவர்கள் இன்று கேள்விக்குறியோடு முடித்துள்ளார். ஆரம்பம் முதல் நல்லவர்களாக நினைத்தவர்கள் திடீரென வில்லனாக மாறினார் கமலஹாசன் சுட்டிக்காட்டியது யார் என்பதை இன்றைய எபிசோடில் பார்ப்போம் 

From around the web