கேப்டன் சம்யுக்தாவை தூண்டிவிட்ட அர்ச்சனா: துவம்சம் செய்த ஆரி!

 


கடந்த முறை வேல்முருகனை தூண்டிவிட்டு பாலாஜியுடன் மோதிய அர்ச்சனா, இந்த முறை சம்யுக்தாவை தூண்டிவிட்டு ஆரியுடன் மோத முடிவு செய்ததை அடுத்து ஆரி சுதாரித்துக்கொண்டு சம்யுக்தாவை துவம்சம் செய்த காட்சிகள் இன்றைய அடுத்த புரமோவில் உள்ளது

வீட்டை பெருக்க வேண்டும் வாருங்கள் என்று கேப்டன் என்ற முறையில் சம்யுக்தா, ஆரியை அழைக்க, அதற்கு ஆரி, வரமுடியாது என்றும் ஒரு கேப்டன் ஒருதலைப்பட்சமாக இருக்க கூடாது என்றும் கூறுகிறார்

அர்ச்சனா தான் காலையிலேயே பெருக்கி விடலாம் என்று கூறினார் என்று சம்யுக்தா கூற, அதற்கு ‘அர்ச்சனா சொல்வதைக் கேட்டுக்கொண்டு என்னிடம் நீங்கள் ஏன் வர அவருக்கு வக்காலத்து வாங்கி பேசுகிறீர்கள் என்றும் அவரை துவம்சம் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சம்யுக்தா அழுதுகொண்டே ஆரியிடம் இருந்து திரும்பிச் செல்கிறார்

அர்ச்சனா தனக்கு எதிராக இருப்பவர்கள் ஒவ்வொருவரையும் டார்கெட் செய்து காய் நகர்த்தி வரும் நிலையில் ஆரியிடம் தனது தந்திரம் பலிக்காததை அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதே நேரத்தில் அடுத்த வாரம் உங்கள் ஒவ்வொருவரையும் ஃபேவரிஸ முகத்திரையை கிழிப்பேன் என்று  ஆரி கூறியதை தற்போது அவர் அதனை செயல்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web