அர்ச்சனா வீட்டில விசேஷம்.... பையன் பிறந்தாச்சு!..

தற்போது அர்ச்சனா தங்கைக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
 
அர்ச்சனா வீட்டில விசேஷம்.... பையன் பிறந்தாச்சு!..

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி  பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தவர் பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா. 

பிக்பாஸ் வீட்டுக்குள் அர்ச்சனா, நிஷா, சோம், ரியோ மற்றும் கேபி ஒரு குழுவாக செயல்படுகின்றனர் என்று சில போட்டியாளர்கள் கமல்ஹாசன் முன்பே குற்றச்சாட்டு வைத்தனர். எது எப்படி இருந்தாலும் போட்டி என்று வந்துவிட்டால் அர்ச்சனா புலியாக மாறிவிடுவார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

அதே போல் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் பலருக்கும் தேவையான சமயங்களில் அன்பு காட்டினார் என்பதை மறுக்க முடியாது. ஆனால் சில சமயங்களில் அவர் காட்டிய அன்பு ஒருதலைபட்சமாக இருக்கிறது என்றும் சில போட்டியாளர்கள் கருத்து தெரிவித்தனர். 

தற்போது இப்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்துவிட்டது. இந்நிலையில் அர்ச்சனா வீட்டின் தரப்பிலிருந்து ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. அவரது தங்கை சமீபத்தில்  கர்ப்பமாக இருந்தார். அவரது பெயர் அனிதா. 

அர்ச்சனா பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது அவருடைய தங்கைக்கு பூச்சூடல் விழா நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படங்களை பகிர்ந்து அர்ச்சனாவின் மகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். தற்போது அவரது தங்கைக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..!

From around the web