சிவகார்த்திகேயன் படத்தில் அறிமுகமாகும் பிரபல தொகுப்பாளினியின் மகள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் டாக்டர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மூலம் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் அர்ச்சனாவின் மகள் ஜாரா அறிமுகமாகிறார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அர்ச்சனா தெரிவித்துள்ளார். இந்த படத்தின் மூலம் தனது மகளை நடிகையாக்க அறிமுகப்படுத்திய இயக்குனர் நெல்சன் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கும்
 
சிவகார்த்திகேயன் படத்தில் அறிமுகமாகும் பிரபல தொகுப்பாளினியின் மகள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் டாக்டர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மூலம் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் அர்ச்சனாவின் மகள் ஜாரா அறிமுகமாகிறார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அர்ச்சனா தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் மூலம் தனது மகளை நடிகையாக்க அறிமுகப்படுத்திய இயக்குனர் நெல்சன் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்

சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கும் இந்த படத்தில் வில்லனாக வினய் நடிக்கவுள்ளார். மேலும் யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

From around the web