நோ மேக்கப்... அன்பு மட்டும் போதும்... அர்ச்சானா வெளியிட்ட புகைப்படம்!

துளி கூட மேக்கப் இல்லாமல் தனது மகளுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
 
 

தொலைக்காட்சியில் தொகுப்பாளர்கள் வேலை என்பது சாதாரணமானது இல்லை.

எந்த நொடியும் புதிதாக யோசிக்க வேண்டும், சட்டென்று சில விஷயங்களை சமாளிக்க வேண்டும்.

அப்படி 90களிலேயே தொகுப்பாளினியாக களமிறங்க ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார் அர்ச்சனா. இவர் மக்களுக்கு புதிய முகம் கிடையாது, நல்ல அனைவருக்கும் பரீட்சயப்பட்ட நபர் தான்.

இடையில் சில வருடங்கள் அவரை கேமரா பக்கம் காணவில்லை. இப்போது தான் மீண்டும் தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்து வருகிறார். ஜீ தமிழில் பணிபுரிந்து வந்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்கு வந்தார். இப்போது இங்கேயே பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் அர்ச்சனா இப்போது ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதாவது துளி கூட மேக்கப் இல்லாமல் தனது மகளுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் மேக்கப் இல்லாமலும் அதேபோல் தான் இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

From around the web