பிக்பாஸையே கலாய்த்த அறந்தாங்கி நிஷா: சிடுமூஞ்சி ஷிவானியால் ரசிகர்கள் அதிருப்தி

 

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கப்பட்ட நிலையில் நேற்று முதல் பிக்பாஸ் வீட்டில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன 

முதல்நாள் நிகழ்ச்சியில் அறந்தாங்கி நிஷா ஹீரோயின் போல் மாறி விட்டார். அவர் சக போட்டியாளர்களை கலாய்ப்பது குறிப்பாக நடிகை ரேகாவை கலாய்ப்பது, ரியோவுடன் விளையாடுவது என கலகலப்பாக இருந்தது. ஒரு கட்டத்தில் அவர் பிக் பாஸ்ஸையும் கலாய்த்தார் என்பதும் கேமராவை காதலித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

அதேபோல் ரியோ ராஜ், ரம்யா பாண்டியன், அனிதா சம்பத், பாடகர் வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் கலகலப்பாக பிக்பாஸ் வீட்டில் முதல் நாளில் வலம் வந்தனர். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷிவானி சிடுமூஞ்சி ஆகவே இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் அதேபோல் தர்ஷன் மீது குற்றச்சாட்டு கூறிய சனம் ஷெட்டியும் ஓவர் ஆக்டிங் செய்து முதல் நாளில் ரசிகர்களின் அதிருப்தியை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் ஆஜித், கேப்ரில்லா, பாலாஜி முருகேசன், ஆரி, சம்யுக்தா, சோம் ஆகியோர் இன்னும் ஆட்டத்தை தொடங்கவில்லை என தெரிகிறது. போகப்போக பிக்பாஸ் போட்டியாளர்களின் நடவடிக்கை எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்

From around the web