அடடே இவ்ளோ சீக்கிரம் வளந்துட்டாங்களே... அறந்தாங்கி நிஷா மகளா இது?.

குழந்தையின் லேட்டஸ்ட் வீடியோவை அறந்தாங்கி நிஷா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
 

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே நிஷா தனது கலகலப்பான பேச்சினாலும், டைமிங் காமெடிகளாலும் மக்கள் மனதை பிடித்தவர். 

ஆனால் இந்த சீசனில் ஒரு வாரம் யாருமே எதிர்பார்க்காத வகையில் இரண்டு பேர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அப்படியே அந்த வாரத்தில் சனிக்கிழமை ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட, ஞாயிற்றுக்கிழமை அறந்தாங்கி நிஷா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இந்த சம்பவம் அனைவருக்கும் ஞாபகம் இருக்கும். ஆரம்பத்தில் நம்பிக்கையான போட்டியாளராக இருந்த நிஷா "சில காரணங்களால் போட்டியை சரியாக புரிந்து கொள்ளவில்லை" என்று சக போட்டியாளர்களே பேசுவதையும் காண முடிந்தது. எனினும் யார் மனதையும் புண்படுத்தாமல் விளையாடி முடித்தார்.

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. கிராமத்து வாசனையுடன் இவரது நகைச்சுவையான பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து இவர் தனுஷ் நடித்த மாரி 2 திரைப்படத்திலும் காமெடி ரோலில் கலக்கினார். இந்நிலையில் பிரபல பட்டிமன்ற பேச்சாளரான இவர் தனது கருத்துக்கள் மற்றும் நகைச்சுவைகளால் மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கக் கூடிய திறமை உடையவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். 

நிஷாவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் தான் அவருக்கு சபா என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தை சபாவை பற்றி அவர் பிக்பாஸில் கூறிய சம்பவம் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. பலரையும் கலங்க செய்தது. இந்நிலையில் குழந்தை தற்பொழுது நன்றாகவே வளர்ந்துவிட்டது. குழந்தையின் லேட்டஸ்ட் வீடியோவை அறந்தாங்கி நிஷா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். "அம்மாவுக்கு தவிக்கிறது.. தண்ணி கொண்டு வா" என்று குழந்தையிடம் கேட்க. அழகாக தனது மழலை நடையில் போய் தாய்க்கு தண்ணீர் எடுத்து வருவதைப் பார்க்க முடிகிறது. இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

From around the web