எப்படிப்பட்ட பாடல்  வேண்டும்? ரசிகர்களிடம் கேட்ட ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் “பாடல் கேட்பவர்களே உங்களுக்கு ஸ்லோ பீட்ஸ் வேண்டுமா? ஃபாஸ்ட் பீட் வேண்டுமா?..  என கேட்டு ட்வீட் பதிவிட்டுள்ளார்.
 

இன்று நேற்று நாளை படத்துக்கு பிறகு இயக்குநர் ரவிகுமார் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கியுள்ள படம் அயலான்.

ஏலியன்களை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளனர். இதன் முதல் சிங்கிள் பாடல் நாளை வெளியாகவுள்ளது.

இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ரஹ்மான் இசையில் வேற லெவல் சகோ எனும் பாடல் பிப்ரவரி 17 இன்று வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு, ஏ.ஆர்.ரஹ்மான் “பாடல் கேட்பவர்களே உங்களுக்கு ஸ்லோ பீட்ஸ் வேண்டுமா? அல்லது ஃபாஸ்ட் பீட் வேண்டுமா?.. இல்லை அதைப்பற்றி ஒன்றுமில்லையா??” என கேட்டு ட்வீட் பதிவிட்டுள்ளார்.

ரஹ்மான் இப்படி நேரடியாக ரசிகர்களுடன் உரையாடியதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பதில்களை அளித்து வருகின்றனர். இவற்றில் பெரும்பாலும் “ஃபாஸ்ட் பீட் தலைவா”, “உங்களிடம் இருந்து எப்படிப்பட்ட பாடல் வந்தாலும் பரவாயில்லை சார். எங்களுக்கு உங்கள் பாடல்கள் பிடிக்கும்”, “எங்களுக்கு அந்த 90களின் ரஹ்மான் வேண்டும்” என பதில்கள் குவிந்துள்ளன.


 

From around the web