மேடையில் இருந்து சட்டென கீழே இறங்கிய ரகுமான்... தொகுப்பாளினி செய்த செயல்?

 ரகுமான் 'ஹிந்தி' என கூறிவிட்டு சட்டென்று மேடையில் இருந்து கீழே சென்றுவிட்டார்,
 

இசையமைப்பாளர் தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளராக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவருக்கென்ற ஒரு மிக பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

அந்த வகையில் இவரின் பாடல்களும் ரசிகர்களின் மனதை தொடர்ந்து கொள்ளை கொண்டு வருகிறது. கடைசியாக இவர் இசையில் பிகில் திரைப்படம் வெளியானது.

அந்த தொடர்ந்து பல மொழியில் பணியாற்றி வரும் ரகுமான், அவரின் இசையில் வரிசையாக தமிழில் திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது ரகுமான் தயாரித்துள்ள 99 சாங்ஸ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்துள்ளது. இதில் சிவகார்த்திகேயன், கவுதம் மேனன், எஸ்.ஜெ.சூர்யா, ஷங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இதனிடையே மேடையில் ரகுமான் மற்றும் அப்படத்தின் ஹீரோ நின்று கொண்டு இருந்தபோது தொகுப்பாளினி ஹீரோவிடம் ஹிந்தியில் பேசியுள்ளார்.

அப்போது ரகுமான் 'ஹிந்தி' என கூறிவிட்டு சட்டென்று மேடையில் இருந்து கீழே சென்றுவிட்டார், இதனால் ரசிகர்கள் உற்சாகமாகி கரகோஷம் எழுப்பியுள்ளனர்.

From around the web