20 வருடங்கள் கழித்து ஒன்று சேர்ந்த பார்த்திபன், ஏ.ஆர். ரஹ்மான்

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் ஏ.ஆர்.ஆர் வாய் கேட்பது அரிது! ஆம் ரஹ்மான் சார் இரவின் நிழலில் இருக்கிறார். 
 
 
20 வருடங்கள் கழித்து ஒன்று சேர்ந்த பார்த்திபன், ஏ.ஆர். ரஹ்மான்

நடிகரும் இயக்குனருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன், தனது முந்தைய படமான ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தின் பாராட்டுகள் மற்றும் விருதுகளைத் தொடர்ந்து, மேலும் படத்தின் தேசிய விருது வெற்றிக்குப் பிறகு தான் பகிர்ந்து கொண்ட ஒரு வீடியோவில், இப்போது தனது அடுத்த படமான 'இரவின் நிழல் ' என்ற படத்தை இயக்குவதில் மும்முரமாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இப்போது, ஆஸ்கார் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்று அவர் தெரிவித்துள்ளார். இயக்குனர் மணிரத்னத்திற்காக அவர் இசையமைத்த ஒரு பாடலைப் பற்றி ஒரு இசை ரியாலிட்டி ஷோவில் ரஹ்மான் கூறும்போது "இப்போது பார்த்திபன் ஒரு படம் எடுக்கிறார், அதில் இதே போன்ற பாடலை நாங்கள் முயற்சிசெய்கிறோம்" என்று கூறியிருந்தார். இதுபற்றி பார்த்திபன் கூறும்போது "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் ஏ.ஆர்.ஆர் வாய் கேட்பது அரிது! ஆம் ரஹ்மான் சார் இரவின் நிழலில் இருக்கிறார். பெருமை! தற்போது - 3 பாடல்கள் கைவசம். இன்னொன்று-promotional song. மிகவும் மகிழ்ச்சி" என்று கூறியிருந்தார்.

ரஹ்மானும் பார்த்திபனும் 2001ஆம் ஆண்டு யெலோலோ என்ற இசைப் படத்தில் இணைந்து வேலை செய்தனர். இருப்பினும், பல்வேறு காரணங்களால் இந்த திடடம் கைவிடப்பட்டது. இப்போது, இருவரும் இறுதியாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளனர்.


 

From around the web