செம போங்க.. ராஷி கன்னாவின் புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்!!

ராஷி கன்னா இந்திப் படங்களில் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய நடிகையாக நடித்து வருகிறார். இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்து வருகிறார். இவர் இந்தியில் மெட்ராஸ் கபே என்னும் திரைப்படத்தின்மூலம் சினிமாவில் கால் பதித்தார், துணைக் கதாபாத்திரமாக அறிமுகமான இவருக்கு, தெலுங்கு சினிமா சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது. தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார், இவர் தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு போன்ற படங்களின் மூலம் பிரபலமானார்.
 
செம போங்க.. ராஷி கன்னாவின் புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்!!

ராஷி கன்னா  இந்திப் படங்களில் அறிமுகமாகி தற்போது  தென்னிந்திய நடிகையாக நடித்து வருகிறார். இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்து வருகிறார்.

இவர் இந்தியில்  மெட்ராஸ் கபே என்னும் திரைப்படத்தின்மூலம் சினிமாவில் கால் பதித்தார்,  துணைக் கதாபாத்திரமாக அறிமுகமான இவருக்கு, தெலுங்கு சினிமா சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது.

தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட்  என்ற திரைப்படத்தில் அறிமுகமானார், இவர்  தமிழில் இமைக்கா நொடிகள்,  அடங்க மறு   போன்ற படங்களின் மூலம் பிரபலமானார்.

செம போங்க.. ராஷி கன்னாவின் புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்!!

ராஷி கன்னா தற்போது ஹரியின் அருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். கொரோனாவால் சினிமாப் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில் ராஷி கன்னா ட்விட்டரில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தற்போது ராஷி கன்னா தன்னுடைய வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். ஏன் ஷாக்குன்னு கேக்குறீங்களா? அவர் தானே இசையமைத்தவாறு ஒரு பாடல் பாடுகிறார், மேலும் வீடியோவினைப் பதிவிட்டதோடு, “இசை இதயத்தின் மொழி. கிட்டார் வாசிக்க கற்று வருகிறேன். இப்போது எனக்கு பிடித்த பாடலை வாசிக்கிறேன். உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

“செம போங்க” என ரசிகர்கள் இவரது முயற்சிக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

From around the web