போதைப்பொருள் வழக்கில் சிக்கும் மேலும் ஒரு தமிழ் நடிகை: அதிர்ச்சி தகவல் 

போதைப்பொருள் விவகாரத்தில் ஏற்கனவே தமிழ் நடிகை ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி ஏற்கனவே பாலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்தியும் இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் ரியா கொடுத்த வாக்குமூலத்தில் தமிழ் நடிகையின் ஒருவர் பெயரும் இதில் சம்பந்தப்பட்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் ஆகிய படங்களிலும் சூர்யா நடித்த என்ஜிகே என்ற படத்தில் நடித்த நடிகை ரகுல் பிரீத்திசிங் போதைப்பொருள் விவகாரத்தில் ஈடுபட்டுள்ளதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

அதே போல் பிரபல பாலிவுட் நடிகையும் தனுஷ் நடித்து வரும் பாலிவுட் படம் ஒன்றில் நாயகியாக நடித்துவரும் சாரா அலி கான் பெயரும் போதைபொருள் விவகாரத்தில் அடிபடுகிறது. இதனால் பாலிவுட் திரையுலகில் மேலும் சில பிரபலங்கள் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

From around the web