சூர்யா-ரம்யா பாண்டியன் படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகை: இன்று பூஜை

 

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராகிய ரம்யா பாண்டியன் சமீபத்தில் சூர்யா தயாரிக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தியைப் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜையில் ரம்யா பாண்டியன், இயக்குனர் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர் 

சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை அரசில்மூர்த்தி என்பவர் இயக்க உள்ளார். எம் சுகுமார் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தில் ரம்யா பாண்டியன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ள நிலையில் இந்த படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகையான வாணிபோஜன் இணைந்துள்ளார். இவரும் இன்றைய பூஜையில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருப்பதாகவும் ஒரு மாதம் இடைவிடாமல் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் முதல் முறையாக படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கும் ரம்யா பாண்டியனுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்


 

From around the web