பொங்கல் போட்டியில் இணைந்த மேலும் ஒரு பிரபல நடிகரின் படம்!

 

வரும் பொங்கல் தினத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படமும் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த இரண்டு படங்களின் ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தற்போது மாஸ்டர், ஈஸ்வரனை அடுத்து ஜெயம் ரவியின் பூமி திரைப்படமும் பொங்கல் ரிலீஸில் இணைந்துள்ளது. ஜெயம் ரவி நடித்த பூமி திரைப்படம் ஏற்கனவே ஓடிடியில் வெளியாகும் என்று செய்திகள் வந்த நிலையில் தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது

ஜெயம் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தனது 25வது படமான பூமி திரைப்படம் திரையரங்குகளில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என விரும்பினாலும் காலம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட வேண்டிய சூழ்நிலையை உருவாக்கி உள்ளது என்றும் அதனால் வரும் பொங்கல் தினத்தில் இந்த படம் ஓடிடியில் ரிலீசாகும் என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

bhoomi

எனது நீண்ட திரைப்பயணம்‌ முழுக்க, முழுக்க ரசிகர்களாகிய உங்களால்‌ ஆனது. நீங்கள்‌ அளித்த அளவற்ற அன்பு என்‌ மேல்‌ நீங்கள்‌ வைத்த மிகப்பெரும்‌ நம்பிக்கை, நீங்கள்‌ அளித்த உத்வேகம்‌ தான்‌, சிறப்பான படங்களில்‌ நான்‌ பணியாற்ற காரணம்‌. எனது கடினமான காலங்களில்‌, என்னை உங்களின்‌ சொந்த ரத்தம்‌ போலவே நினைத்து ஆதரவளித்தீர்கள்‌. உங்களின்‌ இந்த ஆதரவே, சினிமா மீதான எனது காதலை நிலைபெற செய்தது. நீங்கள்‌ இல்லாமல்‌, என்னால்‌ இத்தனை தூரம்‌ வெற்றிகரமாக பயணித்திருக்க முடியாது. உங்களை எனது குடும்பத்தினராகவே கருதுகிறேன்‌.

“பூமி” திரைப்படம்‌ எனது சினிமா பயணத்தில்‌ ஒரு மைல்‌ கல்‌. இப்படம்‌ எனது திரைப்பயணத்தில்‌ 25 வது படம்‌ என்பதை தாண்டி, என்‌ மனதிற்கு மிகவும்‌ நெருக்கமான படம்‌. கோவிட்‌ -19 காலத்தில்‌ ரிலீஸாகும்‌ படங்களின்‌ வரிசையில்‌ இப்படமும்‌ இணைந்திருக்கிறது. உங்களுடன்‌ இணைந்து திரையரங்கில்‌ இப்படத்தை ரசிக்க நினைத்தேன்‌, ஆனால்‌ காலம்‌ வேறொரு திட்டம்‌ வைத்திருக்கிறது. இப்படம்‌ உங்கள்‌ இல்லம்‌ தேடி உங்கள்‌ வரவேற்பறைக்கே வரவுள்ளது. டிஸ்னி மற்றும் ஹாஸ்டர் உடன்‌ இணைந்து உங்களின்‌ 2021 பொங்கல்‌ கொண்டாட்டத்தில்‌ பங்குகொள்வதில்‌ நான்‌ பெருமை கொள்கிறேன்‌. நிறைய பண்டிகை காலங்களில்‌ திரையரங்கில்‌ வந்து, எனது திரைப்படத்தை பார்த்து, பண்டிகையை கொண்டாடியுள்ளீர்கள்‌. இந்த பொங்கல்‌ பண்டிகை தினத்தில்‌ எனது அழகான திரைப்படத்துடன்‌ உங்கள்‌ விட்டில்‌ உங்களை சந்திப்பதை, ஆசிர்வாதமாக கருதுகிறேன்‌.

பெரும்‌ அன்புடனும்‌, நிறைய நம்பிக்கையுடனும்‌, என்‌ திரைப்படத்துடன்‌ உங்களை திரையரங்கில்‌ சந்திக்க காத்திருக்கிறேன்‌. கடவுள்‌ நம்மை ஆசிர்வதிக்கட்டும்’ இவ்வாறு தனது அறிக்கையில் ஜெயம் ரவி கூறியுள்ளார்.


 

From around the web