சிவி குமாரின் ’டாவின்சி கோட்’ டைப் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

 

ஹாலிவுட்டில் வெளிவந்த ’தி டாவின்சி கோட்’ என்ற திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. இயேசு குறித்து வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட இந்த படத்தை பல நாடுகள் தடை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் மாயவன் மற்றும் கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் ஆகிய திரைப்படங்களை இயக்கிய வரும் பிரபல தயாரிப்பாளருமான சிவி குமார், ‘டாவின்சி கோட்’ டைப்பில் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக கூறியிருந்தார்

kotravai

இந்த நிலையில் தற்போது அந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ’கொற்றவை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கொற்றவையின் கரம்பிடித்து தமிழக வரலாற்றின் இடையே ஒரு சாகச பயணம் செய்ய இருப்பதாக சிவி குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் 

சிவி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் குறித்த தகவல்கள் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web