பிக்பாஸ் முகில் நடிக்கும் முதல் பட டைட்டில் அறிவிப்பு!

 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் டைட்டில் வின்னர் முகின் என்பதும் கடைசி நேரத்தில் ஒரே ஒரு பாடலை பாடி மக்களின் மனதைக் கவர்ந்து டைட்டில் வின்னர் ஆகி விட்டார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த சீசனே தொடங்கவிருக்கும் நிலையில் 3வது சீசனின் டைட்டில் வின்னரான முகினுக்கு இன்னும் ஒரு திரைப்பட வாய்ப்பு கூட கிடைக்காமல் இருந்தது ஆச்சரியத்தை அளித்தது 

ஆனால் தற்போது அவருடைய முதல் பட அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளி வந்துள்ளது. ஸ்ரீடி புரொடக்சன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் நாயகனாக முகின் நடிக்க உள்ளார் அவருக்கு ஜோடியாக அனுகீர்த்தி வாஸ் என்பவர் அறிமுகமாகிறார்

அஞ்சனா அலிகான் என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ’வெப்பம்’ என்ற படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ’வெற்றி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெற உள்ளதாகவும் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் இந்த படம் வெளிவரும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்


 

From around the web