சுட சுட சூடான அப்டேட்.... தொடங்கியாச்சு அண்ணாத்த படம்... எங்கோ எப்போ தெரியுமா?

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் திங்கள் முதல் சென்னையில் தொடங்கவிருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.
 

அண்ணாத்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் வரையில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து முடிந்தது. அந்த சமயம்  பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி அண்ணாத்த படப்பிடிப்பு நடத்தப்பட்டது. எனினும் படக்குழுவினரில் 4  பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

பின்னர் ரஜினி உட்பட படக்குழுவினர் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டனர். இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மார்ச் 15-ம் தேதி(திங்கள் கிழமை) தொடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படப்பிடிப்பையொட்டி தயாரிப்பு நிறுவனம் அதீத பாதுகாப்பு நெறிமுறைகளை திட்டமிட்டு வருவதாகவும் தெரிகிறது.

ரஜினியுடன் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி, ஜார்ஜ் மரியன் நடிக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, டி.இமான் இசையமைக்கிறார்.

From around the web