அண்ணாத்த, இந்தியன் 2 படங்கள் கைவிடப்படுகிறதா?

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ மற்றும் கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ ஆகிய இரண்டு படங்களும் கைவிடப்பட வாய்ப்பு இருப்பதாக கோலிவுட்டில் ஒரு வதந்தி பரவி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

முன்னணி நடிகர்களின் படங்கள் பெரும்பாலும் கைவிடப்படுவதில்லை. எதிர்பாராத ஒரு சில காரணங்களால் மட்டுமே எப்பொழுதாவது முன்னணி நடிகர்களின் படம் கைவிடப்படும். இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்து வந்த ’அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது ரஜினிகாந்த் உடல்நிலை கோளாறு காரணமாக முழு ஓய்வு எடுத்து வருகிறார். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் ஆறு மாதங்கள் கழித்துதான் நடக்கும் என்றும் அதாவது தேர்தல் முடிந்து புதிய ஆட்சி பதவி ஏற்றவுடன் தான் நடக்கும் என்று கூறப்படுகிறது 

indian 2

அதேபோல் ’இந்தியன் 2’படப்பிடிப்பு இப்போது நடக்கும் வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் விக்ரம் படத்தின் படப்பிடிப்புக்கு கமலஹாசன் செல்வதாகவும் அதன் பின்னர் தேர்தல் பிரசாரத்துக்கு செல்ல இருப்பதாகவும் கூறப்படுவதால் ’இந்தியன் 2’ படப்பிடிப்பும் தேர்தலுக்குப் பின்னர் புதிய ஆட்சி தொடங்கிய உடன் தான் நடக்கும் என்று கூறப்படுகிறது 

எனவே இந்த இரு படங்களும் இப்போதைக்கு ஆறு மாதங்களுக்கு படப்பிடிப்பு இல்லை என்பதால் ஆறு மாதங்கள் கழித்து இந்த படத்தின் நிலை என்ன? கைவிடப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web