அண்ணன்! நகைச்சுவை மன்னன்! அப்துல்கலாம் அவர்களின் அடுத்த வாரிசு!

நடிகர் விவேக் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி  செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் கஞ்சா கருப்பு!
 
அண்ணன்! நகைச்சுவை மன்னன்! அப்துல்கலாம் அவர்களின் அடுத்த வாரிசு!

மக்களுக்கு சிரிக்க வைப்பது மட்டும் இல்லாமல் சிந்திக்க வைக்கும் எண்ணத்தை விதைத்தவர் நடிகர் விவேக் நடிகர். விவேக்கின் ஒவ்வொரு படத்திலும் காமெடி மட்டுமின்றி கருத்துக்களும் வலம் வரும். இத்தகைய சிறப்பு பெற்ற நடிகர் விவேக் அனைத்து தரப்பு மக்களிடமும், அனைத்து தரப்பு நடிகர்களிடமும் சகஜமாக பழகும் இயல்பு கொண்டவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த  அவர் இன்று காலை மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார் என்ற தகவல் மிகுந்த வேதனை அளிக்கிறது.

vivek

மேலும் அஞ்சலி செலுத்த பிரபலங்கள் பலரும் அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் இயக்குனர்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் அவரது வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அவரின் உடலானது இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. மேலும் இந்த ஊர்வலத்தில் ஏராளமான   நடிகர் மற்றும் பிரபலங்கள் பலரும் கலந்துள்ளனர். இந்நிலையில் தற்போது அவருக்கு அஞ்சலி செலுத்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார் பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு .

மேலும் அவர் எங்கள் அண்ணன் நகைச்சுவை மன்னன் என்றும் கூறினார். மேலும் அப்துல் கலாம் ஐயாவின் அடுத்த வாரிசாக இருந்தவர்  என்றும் கூறினார். மேலும் அவர் நம்முடைய கலைவாணி என்றும் கூறினார் மேலும் அவர் பாடம் படித்தவர் என்றும் கூறினார்.மேலும் அவர் நம்ம அண்ணன் நம்ம மன்னன் நம்மோடு தான் இருக்கிறார் என்றும் கூறினார்.மேலும் நகைச்சுவை நடிகர்களிலேயே அவர் தான் ஒரு சிறந்த மன்னர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார் நடிகர் கஞ்சா கருப்பு.

From around the web