அஞ்சான்’ பட நடிகர் தூக்கில் தொங்கி தற்கொலை

 

கோலிவுட்டு உட்பட இந்தியத் திரையுலகில் பல நட்சத்திரங்கள் அவ்வப்போது தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டிருக்கும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

குறிப்பாக சமீபத்தில் பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் திடீரென தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் இந்தியாவையே உலுக்கியது எனக் கூறலாம் 

இந்த நிலையில் தற்போது சூர்யாவின் அஞ்சான் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ள ஆசிப் பாஷ்ரா என்பவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. இதனால் பாலிவுட் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

asif

51 வயதான ஆசிப் பாஷ்ரா தர்மசாலாவில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே முழுமையான விசாரணை குறித்த விவரங்கள் தெரியும் என்றும் போலீசார் தரப்பில் இருந்து கூறப்படுகிறது

From around the web