சனம் இரண்டாம் திருமணம்... வாழ்த்து தெரிவித்த பிக்பாஸ் பிரபலம்!

ஆரம்பத்தில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெறுக்கப்பட்டு, அதன்பின் பெரிதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட போட்டியாளர் தான் சனம் ஷெட்டி.
 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் தன் மேல் இருந்த பல சர்ச்சைகளை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலந்து அனைத்தையும் தவிடுபொடி யாக்கினார் சனம்.

பிக் பாஸ் தர்ஷன் மீது காதல் கொண்டிருந்த சனம், சில கருத்து வேறுபாடு காரணமாக அவரிடமிருந்து பிரிந்துவிட்டார்.

இந்நிலையில் மீண்டும் காதலில் விழுந்த சனம் செட்டி காதலர் தினத்தில் பிரபலம் ஒருவரின் கை கோர்த்தபடி புகைப்படம் வெளியிட்டார். இதற்கு பிக் பாஸ் சீசன் 4ன் பிரபல போட்டியாளர் அனிதா சம்பத் " சனம் ஷெட்டி உங்களின் வருங்காலத்திற்கு வாழ்த்துக்கள் " என பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

From around the web