என்னை எல்லாரும் பயன்படுத்திக்கொண்டார்கள்... வருத்ததத்தில் முக்கிய பிரபலம்!

இரு வாரங்களுக்கு முன்பு யாரும் எதிர்பார்க்காத வண்ணம்அனிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அவர் ஆரியிடம் கோபமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

 

எனினும் போட்டி என்று வந்துவிட்டால் அனிதா புலியாக மாறிவிடுவார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். கடுமையான போட்டியாளராக இருந்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேறியது அவரது ரசிகர்களை சற்று அதிர்ச்சி அடைய செய்தது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அனிதா ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

அவர் கூறும்போது "பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் வைத்திருந்த யுக்திகளை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. என்னுடைய எமோஷனல் குணம் பலருக்கு ஒரு துருப்புச் சீட்டாக மாறிவிட்டது. ஆனால் போகப் போக அதை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. 

நண்பர்களை பிரிப்பது தான் மத்தவங்க யுக்தி என்பது தெரியாம தான் நானும் ஆரியும் சண்டை போட்டோம். அது பின்னாடி எனக்கு புரிந்து தான் அவருக்கு நான் Brush பரிசாக கொடுத்தேன். ஆனால் வெளியில் இருக்கிறவங்க அத அவமானமா நினைச்சுட்டாங்க. அதை புரிஞ்சுகிட்டு தான் ஆரி எனக்கு தங்கச்சின்னு எழுதி அடுத்த நாள் பரிசு தந்தார்" என்று கூறியுள்ளார்.

From around the web