அதல பாதாளத்தில் அனிதாவின் வாக்குகள்: இந்த வாரம் வெளியேறுவது உறுதியா?

 

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனாவின் அன்பு குரூப்பை உடைத்த அனிதாவுக்கு கடந்த வாரம் மிகப் பெரிய பாராட்டுக்கள் குவிந்து வந்தது என்பது தெரிந்ததே 

நெட்டிசன்கள் அனிதாவை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிய நிலையில் திடீரென நேற்று அவர் அளவுக்கு அதிகமாக ஆரியின் மீது கோபப்பட்டது பார்வையாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது 

anitha

ஆரிக்கு ஏற்கனவே சமூக வலைதளங்களில் மிக பெரிய ஆதரவு இருந்துவரும் நிலையில் அவரைப் பகைத்துக் கொண்ட அனிதா இந்த வாரம் வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதி போல் தெரிகிறது 

சற்றுமுன் வந்த தகவலின் படி நேற்று பதிவான வாக்குகளில் 7% வாக்குகள் மட்டுமே அனிதாவுக்கு கிடைத்துள்ளதாகவும் ஆனால் ஆரிக்கு 49% வாக்குகள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது, ஆஜித், ஷிவானியை விட மிகக் குறைவான வாக்குகளை பெற்றுள்ள அனிதா இந்த வாரம் வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதி என்று கூறப்படுவதால் அனிதாவின் ஆதரவாளர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர் 

இருப்பினும் இன்னும் நான்கு நாட்கள் இருப்பதால் அதற்குள் ஏதாவது செய்து அனிதா தனக்கு ஆதரவான வாக்குகளை அதிகரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web