பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அனிதாவின் முதல் டுவீட் 

 

பிக்பாஸ் வீட்டில் இருந்து அனிதா இன்று வெளியேறினார் என ஏற்கனவே சமூக வலைதளங்களில் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட தகவல் வெளிவந்துள்ள நிலையில் தற்போது அனிதாவின் முதல் டுவிட் பதிவு செய்யப்பட்டிருப்பது அவர் வெளியேறி விட்டார் என்பதை 100 சதவீதம் உறுதி செய்துள்ளது 

அனிதா தனது டுவிட்டர் பக்கத்தில் ’அனைத்துக்கும் நன்றி’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த டுவீட்டை அவர் தான் பதிவு செய்திருப்பதாகவும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த உடனே அவர் செய்த முதல் வேலை டுவிட்டை பதிவு செய்தது தான் என்றும் கூறப்பட்டு வருகிறது 

anitha

பிக்பாஸ் வீட்டில் அனிதா மிகவும் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தாலும் ஒரு சில இடங்களில் மட்டும் கோபப்பட்டு வாக்குவாதங்களில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக இந்த வாரம் ஆரியுடன் அவர் தனது கணவர் குறித்துப் பேசாதே என்று மிகவும் ஆத்திரமாக கூறியதுதான் ஆரியின் ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது 

அதன் காரணமாகவே அனிதா இந்த வாரம் வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அனிதா ஒரு நல்ல போட்டியாளர் என்றும் ஆஜித், ஷிவானிக்கு பிறகு அவர் வெளியேற்றப்பட்டு இருக்கலாம் என்பதே அனைவரும் கருத்தாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது


 

From around the web