ஆரியிடம் சாரி கேட்ட அனிதா: கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்!

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஆஜித் அல்லது ஷிவானி தான் வெளியேற்றப்படுவார்கள் என அதிக பார்வையாளர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். இருவரும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த முதல் நாளிலிருந்து எந்தவிதமான ஆர்வமும் இல்லாமல் இருந்தனர் என்பதால்தான் இந்த முடிவு என்பது குறிப்பிடத்தக்கது 
ஆனால் திடீரென ஆரியின் மீது அனிதா ஆவேசமாக கோபப்பட்டால் ஆஜித் மற்றும் ஷிவானியை அடுத்த வாரம் பார்த்துக்கொள்ளலாம், இந்த வாரம் அனிதாவை வெளியேற்றுவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அனிதாவுக்கு வாக்களிக்காமல் வெளியேற்றி விட்டனர்

ஒரு சில நிமிடங்கள் மட்டும் ஆரியிடம் அவர் ஆவேசப்பட்டதால் தான் இன்று அவர் வெளியேறுகிறார். இது குறித்து கமல்ஹாசன் விசாரணை செய்யும் போது தன்னுடைய குடும்பத்தை பற்றி பேசியதால் தனக்கு சென்டிமென்டாக கோபம் வந்துவிட்டது என்றும் ஆரி மீது தனக்கு மரியாதை உள்ளது என்றும் அவரை காயப்படுத்த வேண்டும் என்று தான் எப்போதுமே நினைத்ததில்லை என்றும் ஆரியிடம் நான் சாரி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் 

anitha

இந்த சாரியை அவர் திங்கட்கிழமையை கேட்டு இருந்தால் அவருக்கு வாக்குகள் கிடைத்து இருக்கும் என்பதும் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்ற முறையில் இப்போது அவர் சாரி கேட்கிறார் என்றும் அனிதா குறித்து பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

மிச்சர் கூட்டம் எல்லாம் வீட்டில் இருக்கும் போது ஒரு நல்ல போட்டியாளர் வெளியேறுவது பார்வையாளர்களுக்கும் சற்று வருத்தமாகத்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web