கமலுக்கு பசுமாடு-தென்னைமரம் கதை சொன்ன அனிதா!

 

பிக்பாஸ் வீட்டில் நேற்று கிட்டத்தட்ட முழுவதுமே அனிதாவின் பிரச்சனைகள் குறித்து தான் பேசப்பட்டு வந்தது. அனிதா மற்றும் ஆரி பிரச்சனை, அனிதா மற்றும் பாலாஜி பிரச்சனை தான் பேசப்பட்டது என்பதும், கிட்டத்தட்ட நேற்றைய எபிசோடு முழுவதும் இந்த பிரச்சனைகளால் முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது 

நேற்று அனிதா மற்றும் ஆரி பிரச்சனை குறித்து விசாரணை நடந்து கொண்டிருந்த போது அனிதா தன்னிலை விளக்கம் கொடுக்க முன் வந்தார். அப்போது அவர் ஆரி மற்றும் ரியோ குறித்து சில விஷயங்களை கூறும்போது, இருவரும் ஒரு விஷயத்தை பேச வந்தால் அந்த விஷயத்தை தொடங்கிவிட்டு அதன் பின்னர் இதற்கு முன்னால் நடந்த விஷயங்களுக்கு சென்று விடுவார்கள் என்று கூறினார்

biggboss

இதனை உணர்த்தும் வகையில் ஒரு குட்டிக் கதையும் அனிதா கூறினார். பசுமாட்டை பற்றி எழுதவேண்டும் என்று ஆசிரியர் ஒரு குழந்தையிடம் கூறிய போது அந்த குழந்தைக்கு பசுமாடு குறித்து எதுவும் தெரியாது என்றும், ஆனால் தென்னைமரம் குறித்து அந்த குழந்தைக்கு தெரியும் என்றும், அதனால் அந்த குழந்தை ஒரு ஒரு ஊரில் ஒருவர் பசுமடு வைத்து இருந்தார், அவர் தனது பசுமாட்டை தென்னை மரத்தில் கட்டினர் என்று கூறிவிட்டு அதன்பின் தென்னை மரத்தில் இளநீர் கிடைக்கும், தேங்காய் கிடைக்கும் என்று தென்னை மரம் குறித்து அந்த கட்டுரை முழுவதும் எழுதியிருந்தார் என்று குறிப்பிட்ட அனிதா, இதேபோல் ஆரி மற்றும் ரியோ ஆகிய இருவரும் ஒரு விஷயத்தை பேச வந்தால் அந்த விஷயத்தை மட்டும் பேசாமல் அதற்கு தொடர்பு இல்லாத மற்ற விஷயங்களை பேசுவார்கள், இதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன் என்று கூறினார் 

அனிதாவின் இந்த கதையை கேட்டு ரியோ மற்றும் ஆரி ஆச்சரியமாக அமர்ந்திருந்த நிலையில் கமல் சற்று வித்தியாசமாகவே அனிதாவை பார்த்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web