அனிதா இந்த வாரம், டைட்டில் யாருக்கு? கமல்ஹாசனின் மறைமுக அறிவிப்பு!

 

பிக்பாஸ் நிகழ்ச்சிகள் தற்போது 9 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் இன்று ஒரு போட்டியாளர் வெளியேறிவிட்டால் மீதமுள்ள 8 போட்டியாளர்களில் அடுத்த இரண்டு வாரங்களில் ஒவ்வொரு வாரமும் இரண்டு பேர்கள் ஆக நான்கு பேர் வெளியேறுவார்கள் என்றும் இறுதிப் போட்டியில் 4 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் போட்டியாளர்கள் இன்னும் தங்கள் தவறுகளை உணரவில்லை என்றும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டே இருக்கிறார்கள் என்றும் ஆனால் மக்கள் தான் இறுதி தீர்ப்பாளர் என்பதை மறந்து விட்டார்கள் என்றும் கமல்ஹாசன் கூறுகிறார் 

kamal

அப்போது அவர் தவறுகளை உணர வில்லை என்று கூறும்போது அனிதாவின் காட்சிகளும், வெற்றியாளர்  யார் என்பதை மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என்று கமல்ஹாசன் கூறும்போது ரியோவின் காட்சிகளும் வருகிறது 

இதிலிருந்து அனிதா இந்த வாரம் வெளியேற இருப்பதையும், ரியோ தான் டைட்டில் வின்னர் என்று கமல்ஹாசன் மறைமுகமாக கூறுவதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விஜய் டிவிக்கு ரியோ நெருக்கமானவர் என்பதால் அவர்தான் டைட்டில் வின்னர் ஆக மாற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் ஆனால் மக்கள் ஆரி தான் டைட்டில் வின்னர் ஆக தேர்வு செய்யப்பட வேண்டும் என்று விரும்புவதாகவும் நெட்டிசன்கள் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன


 

From around the web