அனிதா சம்பத் தந்தை திடீர் மறைவு: பிக்பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி!

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த ஞாயிறு அன்று வெளியே வந்த அனிதா சம்பத்தின் தந்தையார் சற்றுமுன்னர் காலமானதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
பிக்பாஸ் வீட்டில் 84 நாட்கள் தாக்குப் பிடிக்கும் சவாலான போட்டியாளராக ஆக இருந்தவர் அனிதா சம்பத். ஆனால் எதிர்பாராத வகையில் திடீரென ஆரியிடம் அவர் கோபப்பட்டதால் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் 84 நாட்களுக்கு பின்னர் குடும்பத்தினரை சந்தித்து மகிழ்ச்சியாக கடந்த இரண்டு நாட்களாக இருந்த அனிதா சம்பத் வீட்டில் திடீரென ஒரு துயரச் சம்பவம் நடந்து உள்ளது
அனிதாவின் தந்தையும் எழுத்தாளருமான சம்பத் திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார். இதனை அடுத்து அனிதா வீட்டினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். .அனிதா தந்தை சம்பத் ஒரு எழுத்தாளர் மற்றும் திரைப்பட வசனகர்த்தா என்பதும் ஒரு சில திரைப்படங்களில் அவர் பணியாற்றி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
சம்பத் மறைவு அனிதாவின் குடும்பத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு என்பதால் அவருடைய ரசிகர்கள் அவருடைய குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்