இந்த வாரம் அனிதா எவிக்டா? மிக்சர் ஹவுஸ்மேட்ஸ் மீண்டும் தப்பித்தார்களா?

 

பிக்பாஸ் வீட்டை பொருத்தவரை அமைதியாக ஆர்ப்பாட்டமின்றி மிக்சர் சாப்பிட்டபடி விளையாடி வருபவர்கள் நீடித்து வருகிறார் என்பதும் ஆவேசமாக சண்டை போடுபவர்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள் என்பதையும் கடந்த சில வாரங்களாக பார்த்து வருகிறோம் 

சுரேஷ், சனம் ஷெட்டி, சம்யுக்தா, அர்ச்சனா, நிஷா ஆகியோர் என்னேரமும் பரபரப்பாகவும் ஆவேசமாகவும் இருந்து வந்த நிலையில் அவர்கள் வெளியேற்றப்பட்டு விட்டனர். அதேபோல் இந்த வாரம் மற்றும் ஒரு ஆவேச போட்டியாளரான அனிதா வெளியேற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறது

இந்த வாரம் அனிதா, ஆரி, கேபி, ஷிவானி மற்றும் ஆஜித் ஆகிய 5 பேரும் நாமினேஷன் பட்டியலில் உள்ளனர். இதில் அனிதாவுக்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் கிடைத்துள்ளதாகவும் ஆரிக்கு மிக அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

anitha

அனிதாவை அடுத்து ஆஜித் குறைவான வாக்குகள் பெற்று இருப்பதாகவும் இருவருக்கும் இடையே மிகக் குறைவான வித்தியாசம் தான் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த வாரம் அனிதா வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக தெரிகிறது

கடந்த வாரம் அன்பு குரூப்பை அதிரடியாக உடைத்து நொறுக்கிய அனிதாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த நிலையில் இந்த வாரம் ஆரி மற்றும் பாலாஜி ஆகிய இருவரிடமும் மாறி மாறி சண்டை போட்டதால் அவர்களுடைய ரசிகர்கள் அனிதாவுக்கு எதிராக வாக்களித்ததால் அனிதாவுக்கு மிகவும் குறைவாக வாக்குகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது 

மொத்தத்தில் இந்த வாரம் அனிதா வெளியேற்றப்படுவது அவரது ஆர்மியினர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ள நிலையில் மிக்சர் சாப்பிட்டு வரும் இரண்டு போட்டியாளர்கள் இந்த வாரமும் தப்பித்துவிட்டார்களா என்ற ஆதங்கமும் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web