பெண் வேட புகைப்படம் எதற்காக? அனிருத் விளக்கம்

நேற்று மாலையில் இருந்தே அனிருத்தின் பெண் வேட புகைப்படம் ஒன்று இண்டர்நெட்டில் வைரலாகி வருகிறது. அனிருத் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கவிருப்பதாகவும், அந்த படத்தில் அவர் பெண் வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்தின் ஸ்டில்தான் இது என்றும் செய்திகள் பரவியது. ஆனால் இந்த செய்தியை அனிருத் மறுத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்காக இந்த பெண் போடப்பட்டு அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது என்றும் இந்த பெண் வேடம் வேறு
 

நேற்று மாலையில் இருந்தே அனிருத்தின் பெண் வேட புகைப்படம் ஒன்று இண்டர்நெட்டில் வைரலாகி வருகிறது. அனிருத் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கவிருப்பதாகவும், அந்த படத்தில் அவர் பெண் வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்தின் ஸ்டில்தான் இது என்றும் செய்திகள் பரவியது. ஆனால் இந்த செய்தியை அனிருத் மறுத்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்காக இந்த பெண் போடப்பட்டு அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது என்றும் இந்த பெண் வேடம் வேறு எந்த படத்திற்காகவும் போடப்பட்டது இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்

இந்த நிலையில் நயன்தாரா நடித்து வரும் கோலமாவு கோகிலா படத்தில் அனிருத் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாகவும், இந்த கேரக்டர் என்னவென்பது குறித்து படக்குழுவினர் சஸ்பென்ஸ் உடன் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் அனிருத், நயன்தாராவுக்கு ஜோடியாக நடிப்பதாக வந்த செய்தியும் வதந்தியே என்று கூறப்படுகிறது

From around the web