ஆத்திரமடையும் ஆரி: அர்ச்சனாவின் கொட்டம் அடங்குமா?

 
ஆத்திரமடையும் ஆரி: அர்ச்சனாவின் கொட்டம் அடங்குமா?

பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வந்தாலும் அர்ச்சனாவின் டாமினேஷன் அதிகம் இருப்பதாகவும் அவர் கேப்டனாக இல்லாத போதே கேப்டன் போல் நடந்து கொண்டதாகவும் அர்ச்சனாவின் ஆதிக்கத்தை அடக்க வேண்டும் என்றும் பார்வையாளர்கள் விமர்சனம் செய்து வந்தனர்

அதே போல பாலாஜியிடம் மோதலில் ஈடுபட்ட அர்ச்சனா, இதனால் தனக்கு மக்களால் கெட்ட பெயர் வரும் என்று நினைத்து  திடீரென தாய் பாசத்தை காட்டி அவருடனான மோதலை சமாதானம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது 

இந்த நிலையில் தற்போது மீண்டும் அர்ச்சனா அடுத்த நாளே தனது சுயரூபத்தை  காட்டி உள்ளார். இம்முறை அவர் ஆரியிடம் மோதுகிறார். ஆரி சாப்பாடு வைக்கும் போது அவர் சர்ச்சைக்குரிய வகையில் ஏதோ கூறியதாகவும் இதனால் ஆத்திரமடைந்த ஆரி, அர்ச்சனாவிடம் மோதும் காட்சிகள் இன்றைய இரண்டாவது புரமோவில் உள்ளது

ஏற்கனவே இன்றைய முதல் புரமோவில் அனிதாவும் ஆரியும் மோசமான போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர் என்பதும் அப்போதே ஆரி, அனைத்து போட்டியாளர்களிடமும் ஆவேசமாக பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தத்த்ல் ஆரியும் ஆட்டத்தில் இருக்கின்றார் என்பது இப்போது தெரிய வருகிறது

From around the web