அந்தாதூன் ரீமேக்: டைட்டில் போஸ்டரை வெளியிட்ட இயக்குனர்!

ஒரு காலத்தில் அஜித்-விஜய் அளவுக்கு தமிழ் திரையுலகில் புகழ்பெற்று இருந்தவர் நடிகர் பிரசாந்த் என்பது தெரிந்ததே. தொடர்ச்சியாக பல வெற்றி படங்களை கொடுத்து வந்த பிறகு திடீரென தமிழ் சினிமாவில் இருந்து கிட்டத்தட்ட விலகிப் போய்விட்டார்
இந்த நிலையில் தற்போது ஒரு மிகப் பெரிய எண்ட்ரி தேவைப்படுவதை அடுத்து பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை விலைக்கு வாங்கி உள்ள அவரது தந்தை தியாகராஜன் அந்த படத்தில் பிரசாந்தை நடிக்க வைக்கிறார். இந்த படத்திற்கு பெடரிக் என்பவர் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை சிம்ரனும் நவரச நடிகர் கார்த்திக்கும் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டில் ’அந்தகன்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டைட்டில் போஸ்டரையும் இயக்குனர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
நான்கே மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, வரும் கோடைவிடுமுறையில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Praise the Lord 😇
— Jj Fredrick (@fredrickjj) January 1, 2021
Happie NewYear🤗 #Andhagan #அந்தகன் Summer 2021@actorprashanth @actorthiagaraja @Music_Santhosh @SimranbaggaOffc @DopMurugs @eforeditor @Rs15Senthil @kabilanchelliah @proyuvraaj #StaarMovies pic.twitter.com/7c4aKigcpZ