சர்கார் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு அன்புமணி கண்டனம்

தளபதி விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று மாலை வெளியான நிலையில் இந்த போஸ்டருக்கு பாமக தலைவர் அன்புமணி தனது டுவிட்டரில் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் விஜய் சிகரெட் பிடித்துக்கொண்டு ஸ்டைலாக இருக்கும் காட்சி விஜய் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ள நிலையில் பாமக இளைஞரணி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் சர்கார் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து தனது கண்டனத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். நடிகர் விஜய்
 

சர்கார் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு அன்புமணி கண்டனம்

தளபதி விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று மாலை வெளியான நிலையில் இந்த போஸ்டருக்கு பாமக தலைவர் அன்புமணி தனது டுவிட்டரில் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் விஜய் சிகரெட் பிடித்துக்கொண்டு ஸ்டைலாக இருக்கும் காட்சி விஜய் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ள நிலையில் பாமக இளைஞரணி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் சர்கார் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து தனது கண்டனத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

சர்கார் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு அன்புமணி கண்டனம்நடிகர் விஜய் தனது அடுத்த படத்தின் போஸ்டரில் புகைப்பிடிப்பதை ஊக்குவிப்பது போல போஸ் கொடுத்திருப்பதால் அவமானப்படுகிறேன் என்று ஒரு டுவிட்டு8ம் அந்த சிகரெட் இல்லாமல் நீங்கள் இன்னும் ஸ்டெலாக இருப்பீர்கள் என்று இன்னொரு டுவிட்டிலும் கூறியுள்ளார்.

ஏற்கனவே அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்த போது ரஜினி, விஜய் உள்பட பல பெரிய நடிகர்கள் புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதனை ஏற்ற ரஜினி, விஜய் ஆகியோர் இனிமேல் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று உறுதி கூறினர் என்பது கூறிப்பிடத்தக்கது. இந்த வாக்கை ரஜினி இன்று வரை காப்பாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web