கருப்பு இனத்தவர்களுக்கு ஆதரவு திரட்டும் எமி ஜாக்சன்!

அமெரிக்காவில் சமீபத்தில் கருப்பு இனத்தவர் ஒருவரை கொன்ற சம்பவம் அரங்கேறியது, அந்த சம்பவத்தால் உயிர் இழந்த கருப்பினத்தவருக்கு நிகழ்ந்த கொடுமைக்கு நீதி கேட்டு அமெரிக்காவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வெள்ளை மாளிகையில் மக்கள் போராட்டத்திற்கு நீதி கிடைக்காத நிலையில், மே 31 ஆம் தேதி வெள்ளை மாளிகை முன்பு கருப்பின மக்கள் பலரும் போராட்டத்தினைத் துவக்கினர். இந்தநிலையில் திரைப் பிரபலங்கள் பலரும் கருப்பு இனத்தவர்களுக்கு ஆதரவினைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகை எமி ஜாக்சன் தனது
 
கருப்பு இனத்தவர்களுக்கு ஆதரவு திரட்டும் எமி ஜாக்சன்!

அமெரிக்காவில் சமீபத்தில் கருப்பு இனத்தவர் ஒருவரை கொன்ற சம்பவம் அரங்கேறியது, அந்த சம்பவத்தால் உயிர் இழந்த கருப்பினத்தவருக்கு நிகழ்ந்த கொடுமைக்கு நீதி கேட்டு அமெரிக்காவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

வெள்ளை மாளிகையில் மக்கள் போராட்டத்திற்கு நீதி கிடைக்காத நிலையில், மே 31 ஆம் தேதி வெள்ளை மாளிகை முன்பு கருப்பின மக்கள் பலரும் போராட்டத்தினைத் துவக்கினர்.  இந்தநிலையில் திரைப் பிரபலங்கள் பலரும் கருப்பு இனத்தவர்களுக்கு ஆதரவினைத் தெரிவித்து வருகின்றனர்.

கருப்பு இனத்தவர்களுக்கு ஆதரவு திரட்டும் எமி ஜாக்சன்!

அந்தவகையில் நடிகை எமி ஜாக்சன் தனது கருத்தினைப் பதிவிட்டுள்ளார். அதாவது, “மூன்று கருப்பு இனத்தவர்களான அகமத் ஆர்பெரி, பிரோனா டெய்லர் மற்றும் ஜார்ஜ் பிலாய்ட் ஆகியோர் கொலை செய்யப்பட்டது உண்மையில் நெஞ்சினை சுக்கு நூறாக உடைத்துவிட்டது. உண்மையில் இதனை மனிதத்தன்மையற்ற செயலாகவே நான் பார்க்கிறேன்.

இதுபோன்ற பாவங்கள் செய்வதற்கு எதிராக நாம் நாம் நிற்கவில்லையெனில், நிச்சயம் நாமும் அதுபோன்ற மோசமான செயலுக்கு உடந்தையாவோம். நாம் அனைவரும் கருப்பின மக்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

சமூகவலைதளங்களில் பதிவு செய்துவிட்டு, போய்விடுவதைவிட ஒற்றுமையுடன் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம்” என்று கூறியுள்ளார்.

From around the web