சத்யராஜ் மகளுக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் அளித்த கெளரவம்!

 

பிரபல நடிகர் சத்யராஜின் மகள் ஒரு ஊட்டச்சத்து நிபுணர் என்பதும் அவர் ஊட்டச்சத்து குறித்து பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பாக பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து சரியாக கிடைக்க வேண்டும் என்றும் தமிழக அரசிடம் அவர் வலியுறுத்தி வருகிறார் என்பதும் தெரிந்ததே 

மேலும் சமீபத்தில் அவர் ஒரு அரசியல் கட்சியில் சேரப் போவதாக கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக திமுகவில் திவ்யா சேரப் போவதாகவும் சத்யராஜ் திமுகவுக்காக பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டது 

divya

இந்த நிலையில் தற்போது சத்யராஜ் மகள் திவ்யாவுக்கும் அமெரிக்காவில் உள்ள உலக தமிழ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. ஊட்டச்சத்து நிபுணர் என்ற வகையில் அவருக்கு இந்த டாக்டர் பட்டம் அளிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது

சத்யராஜ் மகளுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த டாக்டர் பட்டத்தை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக நடிகர் கார்த்திக் தனது டுவிட்டர் பக்கத்தில் திவ்யாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்


 

From around the web