அமேசானின் முதல் தமிழ் ஆந்தாலஜி திரைப்படம்: டைட்டில் அறிவிப்பு!

 

அமேசான் நிறுவனம் முதன்முதலாக 5 முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் ஆந்தாலஜி திரைப்படம் ஒன்றை தமிழில் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த ஆண்டு ஆந்தாலஜி படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது 

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதியை அமேசான் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ’புத்தம் புது காலை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த ஆண்டு ஆந்தாலஜி திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 16ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 

சுஹாசினி மணிரத்னம், கார்த்திக் சுப்புராஜ், ராஜீவ் மேனன், கௌதம் மேனன், மற்றும் சுதா கொங்காரா ஆகியோர்கள் ஐந்து பாகங்களாக இந்த ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்றும் இதனால் அமேசான் பிரைம்க்கு மிக அதிக வாடிக்கையாளர்கள் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது

From around the web