‘மாஸ்டர்’ படத்தை விலைக்கு வாங்கிய அமேசான்: பரபரப்பு தகவல்!

 

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஒரு சிலர் மட்டும் இன்னும் இந்த படம் திரையரங்குகளில் வெளி வராது என்றும் ஓடிடியில் தான் வெளிவரும் என்றும் கூறிவருகின்றனர் 

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை அமேசான் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த படத்தின் ஒப்பந்தத்தில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன ஒரு மாதத்திற்குப் பின்னரே ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்பட்டு இருப்பதாகவும் அதனால் ‘மாஸ்டர்’ திரைப்படம் முதலில் வெளியாவது திரையரங்குகளில் தான் என்றும் அதன் பின்னர்தான் ஓடிடியில் வெளியாகும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது 

master

இருப்பினும் ‘மாஸ்டர்’ திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாவது 100% உறுதி செய்யப்படாததால் ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் செய்யவும் சிறிய வாய்ப்பு உள்ளதாக திரையுலக வட்டாரங்கள் கூறி வருகின்றன


 

From around the web