அவ நடிக்கலை... உண்மையாகவே அழுகிறார்... கொட்டி தீர்த்த ஆல்யா!!!

விஜய் டிவி ராஜா ராணி தொடரின் மூலம் ரசிகர்களிடையே சென்றடைந்தவர் ஆல்யா மானசா. 

 
அவ நடிக்கலை... உண்மையாகவே அழுகிறார்... கொட்டி தீர்த்த ஆல்யா!!!

சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த க்யூட்டான தம்பதியருக்கு ரசிகர்கள் ஏராளம். 

இந்த தம்பதியருக்கு இப்போது குழந்தையும் உள்ளது. இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியலின் 2வது பாகத்தில் ஆல்யா மானசா நடித்துவருகிறார். இந்நிலையில் விஜய் டிவியில் நடந்த எங்க வீட்டு மகாலட்சுமி ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்குபெற்று தனிநடிப்பு செய்துகாட்டினார் ஆல்யா. 

அதில் ‘எனக்கு என் அம்மா, அப்பா, தங்கச்சி எல்லாம் வேணும்’ என கதறி அழுகிறார். அனைவரும் உண்மையிலேயே கண்கலங்குகின்றனர். இதனைப் பார்த்த சில நடிகைகள், ‘அவ நடிக்கவில்லை.. உண்மையிலேயே அவளது ஃபீலிங்ஸ் அதுதான்!’ என்று உருக்கமாக கூறுகின்றனர். ஞாயிறு மதியம் 3 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. 

From around the web