பிரபல இயக்குனரின் மூன்று மருமகன்களும் இயக்குனர்களே: ஒரு ஆச்சரிய ஒற்றுமை

 

தமிழ் திரை உலகில் முதல் முதலாக இயக்குனருக்காக தேசிய விருது பெற்றவர் இயக்குனர் அகத்தியன் என்பது தெரிந்ததே. அஜித் மற்றும் தேவயானி நடித்த காதல் கோட்டை என்ற திரைப்படத்திற்காக அவருக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியன் அவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். முதல் மகள் கனி. இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இருந்து வருகிறார். இவருடைய கணவர் தான் இயக்குனர் திரு என்பதும்  இவர் சமர் உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கியுள்ளார்  என்பதும் குறிப்பிடத்தக்கது

niranjani

அதேபோல் அகத்தியனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி. இவரும் பெரோஸ் என்ற இயக்குனரை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குனர் அகத்தியனின் மூன்றாவது மகளான நிரஞ்சனி தற்போது, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமியை திருமணம் செய்யவுள்ளார்.

அந்த வகையில் இயக்குனர் அகத்தியனின் 3 மருமகன்களுமே இயக்குனர்கள் என்பது ஒரு ஆச்சரியம்மான அதிசயமான ஒற்றுமையாக கோலிவுட் திரையுலகில் பார்க்கப்படுகிறது

From around the web