அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷன்: டுவிஸ்ட் வைத்த பிக்பாஸ்

 
அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷன்: டுவிஸ்ட் வைத்த பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நாமினேஷன் படலம் தொடங்கியது. பிக்பாஸ் வீட்டில் உள்ள கார்டனில் போட்டியாளர்களின் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. இதில் ஒவ்வொருவராக வந்து நாமினேஷன் செய்தனர்

இந்த நாமினேஷன் படலத்தில் கிட்டத்தட்ட அனைவருமே நாமினேட் செய்யப்பட்டது போல் இருந்தது. இதனை அடுத்து பிக்பாஸ் யார் யார் நாமினேஷன் செய்யப்பட்டனர் என்ற அறிவிப்பை பிக்பாஸ் அறிவித்தார்.

biggboss

ஒவ்வொருவர் பெயர் அறிவிக்கப்பட்டு வந்தபோது கிட்டத்தட்ட அனைவருமே நாமினேட் செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக போட்டியாளர்கள் அனைவரும் நாமினேஷன் செய்யப்பட்ட்தை அறிந்து போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் ஆச்சரியம் அடைந்தனர்

அதன் பின்னர் பிக்பாஸ் திடீரென ஒரு ட்விஸ்ட் வைத்து, இந்த வாரம் தீபாவளி வாரம் என்பதால் நாமினேஷன் கிடையாது என்றும் அனைத்து போட்டியாளர்களும் வீட்டிலேயே இருக்கலாம் என்றும் தெரிவித்தார். இதனை அடுத்து பிக் பாஸ் போட்டியாளர் துள்ளி குதித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இருப்பினும் இந்த வாரம் ஒருவர் வெளியேற்றப்பட்டிருந்தால் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றிருக்கும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது

From around the web