முன்னணி நடிகையுடன் திருமண கோலத்தில் பிரபல சீரியல் நடிகர்....
TRPயில் முன்னணி இருக்கும் சீரியலில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா.
Thu, 25 Mar 2021

பாரதி கண்ணம்மா சீரியலில் கதாநாயகியின் தந்தையாக நடித்து வரும் நடிகர் வெங்கடேஷ் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
இதில் கதாநாயகியாக நடித்து வரும் ரோஷினி, பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே சேர்த்துள்ளார்.
மேலும் இவரை தவிர்த்து, அருண், கண்மணி, அகிலன் என பல கதாபாத்திரங்கள் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் நடிகர் அகிலன், முன்னணி நடிகை காஜல் அகர்வாலுடன் திருமண கோலத்தில் புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்த புகைப்படம் திருமண விளம்பரத்தின் போது என்றும், இதில் ஒரு கதாபாத்திரமாக அகிலன் நடித்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.