வலிமை படம் பற்றி அஜித் சொன்ன தகவல்... ரசிகர் உருக்கம்!
ஹைதராபாத்தில் சில ரசிகர்கள் அஜித்தை சந்தித்துள்ளனர். அதில் ஒரு ரசிகர் வலிமை பட அப்டேட் எப்போது என அஜித்திடமே கேட்டுள்ளார்.
Tue, 2 Feb 2021

இளம் இயக்குனர் வினோத், அஜித்தை வைத்து இரண்டாவது முறையாக இயக்கிவரும் படம் வலிமை. கொரோனா லாக் டவுன் முடிந்து படப்பிடிப்பு இடைவேளை இல்லாமல் வேகமாக நடந்து வருகிறது.
அண்மையில் அஜித் idhe maa katha என்ற தெலுங்கு பட டீஸரை பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டியிருந்தார், அவர்களை சந்திக்கவும் விருப்பம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஹைதராபாத்தில் சில ரசிகர்கள் அஜித்தை சந்தித்துள்ளனர். அதில் ஒரு ரசிகர் வலிமை பட அப்டேட் எப்போது என அஜித்திடமே கேட்டுள்ளார்.
அதற்கு அவர், மிக விரைவில் என பதில அளித்துள்ளாராம்.