ரொம்ப ஓவரா இருக்கு ஆஜித்: அடுத்த வாரம் நீதான்: நெட்டிசன்கள் கிண்டல்

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று எவிக்ஷன் பிராசஸ் நடந்துகொண்டிருந்தபோது கேபி மற்றும் ஷிவானி ஆகிய இருவரும் காப்பாற்றப்பட்டதாக கமல்ஹாசன் அறிவித்தார். இதனை அடுத்து கடைசி கட்டத்தில் அனிதா அல்லது ஆஜித் இருவரில் ஒருவர் வெளியேற வேண்டும் என்ற நிலை இருந்தது

இந்த நிலையில் இடைவேளையின் போது ஆஜித் ரொம்பவே சோகமாக இருந்தார். கடைசி நேரத்தில் தான் ஒவ்வொரு முறையும் காப்பாற்றப்படுவதாக அவர் புலம்பிக் கொண்டிருந்த போது பாலாஜி அவருக்கு ஆறுதல் கூறினார் 

நீ மூன்றாவது வாரமே எவிக்சன் செய்யப்பட்டாய். ஆனால் எவிக்சன் கார்டு காரணமாகத்தான் தப்பித்துள்ளார். உன்னை ஒவ்வொரு வாரமும் தாமதமாக என்றாலும் மக்கள் காப்பாற்றி கொண்டிருக்கின்றனர் என்பதை நினைத்துப் பெருமைப்படு என்று ஆறுதல் கூறினார் 

aajith

ஆனால் அந்த ஆறுதலை ஏற்றுக்கொள்ளாமல் ஆஜித் தான் கடைசி நேரத்தில் காப்பாற்றப்படுவது இர்ரிடேட்டாக இருப்பதாக தெரிவித்தார். ஒவ்வொரு வாரமும் சர்ச்சைக்குரிய ஒருவரை வெளியேற்ற வேண்டும் என்ற நிலை காரணமாகத்தான் ஆஜித், ஷிவானி ஆகிய இருவரும் தப்பித்து கொண்டிருந்தனர் என்றும் அதற்காக ஆஜித் நன்றாக விளையாடியதாக அர்த்தம் இல்லை என்றும் நெட்டிசன்கள் இதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர் 

சர்ச்சைக்குரிய போட்டியாளர்கள் அனைவரும் தற்போது வெளியேறி விட்டதால் இனி அடுத்த குறி உனக்குதான் என்றும் அடுத்த வாரம் உன்னை வெளியேற்றுகிறோம் என்றும் நெட்டிசன்கள் கங்கணம் கட்டிக் கொண்டு இருப்பதால் இந்த வாரம் ஆஜித் வெளியேறுவது உறுதிசெய்யப்பட்டதாகவே கருதப்படுகிறது

From around the web