அஜித்தின் முதல் பட இயக்குனர் வீட்டில் விசேஷம்: போனில் வாழ்த்து கூறிய தல

அஜித் திரையுலகில் அறிமுகமான திரைப்படம் ’அமராவதி’ என்பது அனைவரும் அறிந்ததே. இந்த திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் செல்வா. இவர் அதன் பிறகு பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் இயக்குனர் செல்வாவின் மகன் ராஜீவ் என்பவருக்கும் மீரா என்பவருக்கும் சமீபத்தில் சென்னையில் திருமணம் நடந்தது. ஊரடங்கு காரணமாக இந்த திருமணத்திற்கு மிகக்குறைந்த நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாகவும் திரையுலகினர் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை என்று கூறப்படுகிறது மணமகன் ராஜீவ் மற்றும் மணமகள் மீரா ஆகிய இருவருமே
 

அஜித்தின் முதல் பட இயக்குனர் வீட்டில் விசேஷம்: போனில் வாழ்த்து கூறிய தல

அஜித் திரையுலகில் அறிமுகமான திரைப்படம் ’அமராவதி’ என்பது அனைவரும் அறிந்ததே. இந்த திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் செல்வா. இவர் அதன் பிறகு பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் இயக்குனர் செல்வாவின் மகன் ராஜீவ் என்பவருக்கும் மீரா என்பவருக்கும் சமீபத்தில் சென்னையில் திருமணம் நடந்தது. ஊரடங்கு காரணமாக இந்த திருமணத்திற்கு மிகக்குறைந்த நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாகவும் திரையுலகினர் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை என்று கூறப்படுகிறது

மணமகன் ராஜீவ் மற்றும் மணமகள் மீரா ஆகிய இருவருமே என்ஜினீயர்கள் என்பதும் இந்த திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றும் கூறப்படுகிறது

இந்த திருமணத்தை அடுத்து இயக்குனர் செல்வாவின் குடும்பத்தினருக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தல அஜித் அவர்கள் தனது முதல் பட இயக்குனர் என்ற மரியாதை காரணமாக போன் மூலம் இயக்குனர் செல்வாவுக்கு வாழ்த்து தெரிவித்ததாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன

From around the web